‘மைனா’ படத்தின் மூலம் ஹீரோவான விதார்த், ‘குரங்கு பொம்மை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்று தரமான படங்களில் நடித்து வருபவர், தொடர்ந்து கதை தேர்வுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
கூத்துப்பட்டறையில் பயின்ற விதார்த், பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்திருப்பதோடு, அவரிடம் பலமான பாராட்டையும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கூட பாரதிராஜா, விதார்த்தை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடினார். அந்த அளவுக்கு தனது எதார்த்தமான நடிப்பால் அவரை விதார்த் கவர்ந்திருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது சினிமாவில் தொடர் வெற்றி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியே, விதார்த்தால் தான் ஹீரோவான தகவல் கசிந்துள்ளது.
கூத்துப்பட்டறையில் விஜய் சேதுபதி கேஷியராக பணியாற்றியது அனைவரும் அறிந்தது தான். பிறகு தனக்கு இருக்கும் நடிப்பு ஆர்வத்தை சொல்லி, கூத்துப்பட்டறை மூலம் போடப்படும் தெரு நாடகங்களில் நடிக்க தொடங்கியவர், அப்படியே குறும்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையே, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் முதலில் விதார்த்தை தான் சீனு ராமசாமி ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆனால் சில காரணங்களால் விதார்த்தால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. அப்போது சீனு ராமசாமி விஜய் சேதுபதி குறித்து விதார்த்திடம் விசாரிக்க, விதார்த்தும் அவரிடம் விஜய் சேதுபதி குறித்து நல்லபடியாக சொல்லி ரெக்கமண்ட் செய்திருக்கிறார். அதேபோல், விஜய் சேதுபதியிடமும், ”கதை கேட்காமல் போய் படி” என்று கூறினாராம்.
இந்த தகவலை இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ள விதார்த், தற்போதும் விஜய் சேதுபதி நல்ல படம் கொடுத்தால் அவருக்கு போன் செய்து பாராட்டுவாராம், விஜய் சேதுபதியும் விதார்த்துக்கு போன் செய்து பாராட்டுவாராம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...