அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும் போதே பல புதிய முயற்சிகளை மேற்கொண்டது. அப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம், படத்தின் புரோமோஷன் பணிகளில் பல புதிய யுகதிகளை கையாண்டது பெரும் வரவேற்பை பெற்றது.
டீசர், டிரைலர், பாடல்கள் என்று அனைத்தும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது போல ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் அரசியல் சர்ச்சையிலும் சிக்கியது. இருந்தாலும், படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்ததோடு, ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்தார்கள். இதனால் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஓடி ஒளியும் அளவுக்கு ‘மெர்சல்’ படத்தின் வசனங்கள் விஸ்வரூபம் எடுத்ததோடு, படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதன் மூலம், ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் செய்த வசூல் சாதனையை முறியடித்த விஜய், தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸின் நம்பர் ஒன் நடிகர் என்ற பெருமையை பெற்றதோடு, தனது மெர்சல் படம் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்.
இந்த நிலையில், ’மெர்சல்’ படத்திற்கு இங்கிலாந்து நாட்டு கெளரவம் கிடைத்திருப்பது, படக்குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் நான்காவது தேசிய திரைப்படா விழாவுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில், விஜயிடன் ‘மெர்சல்’ சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...