Latest News :

மலையாள சினிமாவில் கால் பதிக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்!
Friday March-30 2018

தனது இசை மூலம் ஓட்டு மொத்தர் ரசிகர்களை மட்டும் இன்றி தமிழ்த் திரையுலகையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இவருடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள் அனைவரும், இவரது பணியையும், இவர் பின்னணி இசை அமைக்கும் விதம் மற்றும் பாடல்களை கொடுக்கும் விதத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் பட்டியலில் எளிதில் இடம்பிடித்திருக்கும் சாம் சி.எஸ், தற்போது மலையாள சினிமாவிலும் கால் பதிக்கிறார். மோகன்லால் நடிக்கும் ‘ஓடியன்’ படத்திற்கு பின்னணி இசை அமைப்பதன் மூலம் சாம் சி.எஸ் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.

 

தனது மலையான சினிமா எண்ட்ரி குறித்து கூறிய சாம் சி.எஸ், “விக்ரம் வேதா ரிலிஸுக்கு பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று விடாமல் ஒட்டு மொத்த படத்துக்கும் என்னால் இசையமைக்க முடியும் என தீவிரமாக நம்புபவன் நான். ஆனால், மோகன்லால் சாரின் ஓடியன் படத்திற்கு கேட்ட போது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான்லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக அமைந்திருந்தது.

 

ஓடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதை கேள்விப்பட்ட உடனே கேரளாவின் பழங்கால புராதான இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை தோன்றியது. வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ஃப்ளூட் தான். ஆனால் 6 அடி நீளம் மூங்கில் இசைக்கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்க தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்துக்கு பயன்படுத்திக் கொண்டோம்.” என்று தெரிவித்த சாம் சி.எஸ், படத்தை முழுமையாக காட்சிப்படுத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ஓடியன் படக்குழுவையும் கவர்ந்து விட்டாரம்.

Related News

2298

பிரபலங்கள் வெளியிட்ட ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Thursday January-02 2025

ஸ்ரீ கிருஷ்ண புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...

கவனம் ஈர்க்கும் ‘எமகாதகி’ முதல் பார்வை போஸ்டர்!
Wednesday January-01 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

ஜெயலட்சுமி இயக்கத்தில் லிங்கேஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம்!
Wednesday January-01 2025

ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...

Recent Gallery