‘நான் மகான் அல்ல’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்று தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பயணித்த சுசீந்திரன், திடீரென்று டி.இமானுடன் கூட்டணி வைத்து பயணிக்க தொடங்கினார். சுசீந்திரன் - இமான் கூட்டணியில் வெளியான பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றாலும், சுசீந்திரன் யுவனிடம் இருந்து விலகியதை ரசிகர்கள் யாரும் விரும்பவில்லை.
இந்த நிலையில், மீண்டும் யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி சேர்ந்து சுசீந்திரன், இந்த முறை கால்பந்து விளையாட்டை மையமாக கொண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்காக கடந்த சில நாட்களாக நடிகர் நடிகைகள் தேர்வில் ஈடுபட்டு வந்த சுசீந்திரன், கதாநாயகனாக ரோஷன் என்ற கால்பந்து விளையாட்டு வீரரை தேர்வு செய்திருக்கிறார். கதாநாயகியின் இளம் பருவத்திற்காக நிக்னு என்பவரை தேந்தெடுத்திருக்கிறார். இவர் சுசீந்திரன் இயக்கிய ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
தற்போது இப்படத்திற்கான ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்திருக்கும் சுசீந்திரன், படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்களுக்காக நிஜமான கால்பந்தாட்ட வீரர்களை தேடிக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...