சென்னை,மார்ச் 24 : ’சின்ன தம்பி பெரிய தம்பி’ படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி கலந்த அண்ணன் தம்பி படங்கள் வரவு குறைந்துவிட்டது. தற்போது அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் உருவாகும் படம் தான் ‘ராஜா மந்திரி’. மெட்ராஸ் கலையரசனும், காளி வெங்கட்டும் இணைந்து நடிக்கும் இப்படத்தை உஷா கிருஷ்ணன் இயக்குகிறார். இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அண்ணன் தம்பி உறவு ஒரு பக்கமும், அவர்களுக்கு உண்டாகும் காதலும், மனதைத் தொடும் சென்டிமெண்ட் அனுபவங்களுமே கதை. படம் பார்க்கும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு முழு பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாக அமைந்திருப்பதை, அதன் விளம்பர காட்சிகளைப் பார்த்தாலே புரியும். காதலும், அதன் கலாட்டாக்களும் கலந்து இருந்தாலும், அண்ணன் தம்பி உறவுக்குள் இருக்கும் அற்புதமான உணர்வுகளுக்கும், சென்டிமெண்ட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
’எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பேனரில் வி.மதியழகன் மற்றும் ஆர். ரம்யா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இவர்களோடு கண்களைக் கொள்ளை கொள்ளும் அழகியலான ஒளிப்பதிவுக்குப் பெயர் பெற்ற பிஜி முத்தையா தனது பிஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் மூலம் இணைத் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்தின் சிங்கில் டிராக் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனது கனவு தேவதையை நினைத்து, உற்சாகமாகி காளி வெங்கட் பாடும் பாடலாக ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே’ பாடம் அமைந்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் அருமையான இசையில், ஏ.சி.எஸ். ரவிசந்திரன் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...