Latest News :

மோசடி மன்னனான கெளதம் மேனன்! - அதிர்ச்சியளிக்கும் தயாரிப்பாளரின் அறிக்கை
Friday March-30 2018

தனது படங்கள் மூலம் ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்த கெளதம் மேனனின், மறுபக்கம் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

’என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என்று இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் கெளதம் மேனன், அப்படங்களை குறித்த நேரத்தில் முடிக்காமல், அப்படம் சார்ந்தவர்களை ரொம்பவே கஷ்ட்டப்படுத்தி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இயக்குநர் கார்த்திக் நரேனின் விவகாரத்தில் அது நிரூபனமாகியுள்ளது.

 

’துருவங்கள் பதினாறு’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேனின், இரண்டாவது படமான ‘நரகாசூரன்’ படத்தை தயாரிப்பதாக கூறி, கார்த்திக் நரேனுடன் கூட்டணி சேர்ந்த கெளதம் மேனன், அப்படத்தின் இன்வெஸ்டரான பத்ரி கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு, நரகாசூரன் படத்திற்கு எந்தவித பணத்தையும் வழங்கவில்லை என்றும், பிறகு கார்த்திக் நரேனே தனது சொந்த பணத்தை போட்டு அப்படத்தை முடித்துவிட்ட நிலையில், தற்போது கெளதம் மேனன் அவரிடம் பங்கு கேற்பதாகவும், ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

 

தற்போது இந்த விவகாரம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன், சமூக வலைதளங்களில் பேச தொடங்கியதும், அதற்கு கெளதம் மேனன் பதில் அளித்தது என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், கெளதம் மேனன் இயக்கும் படங்களுக்கு இன்வெஸ்டராக இருந்த பத்ரி என்பவர் கெளதம் மேனன் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருக்கிறார்.

 

தெளிவான கதை இல்லாமல் படத்தை தொடங்கும் கெளதம் மேனன், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும், குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள்ளும் முடிக்காமல் இழுத்தடிப்பதோடு, தேவையில்லாத செலவுகளால் பட்ஜெட்டையும் பெரிதாக்கிவிடுவார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவருடன் பெரிய ஹீரோக்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பணியாற்றுவதில்லை.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்க இருந்த ஒரு படத்தில் ரூ.4 கோடியை புன்னியமூர்த்தி என்பவர் இன்வெஸ்ட் செய்திருந்தார். ஆனால், அப்படம் குறித்து இதுவரை எந்தவித ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாத கெளதம் மேனன், புன்னிய மூர்த்தியின் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதேபோல் தான், தற்போதைய விவகாரத்தில் அடிபடும் இன்வெஸ்டர் பத்ரியின் பணத்தையும் கெளதம் மேனன் அபேஸ் செய்திருக்கிறார்.

 

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களின் இன்வெஸ்டரான பத்ரியிடம் பணத்தை வாங்கிய கெளதம் மேனன், சரியான முறையில் படத்தை முடிக்காமல் காலம் கடத்தி வருகிறார். அதேபோல், நரகாசூரன் படத்திற்கும் பத்ரியின் பணத்தை பயன்படுத்துவதாக கூறிய கெளதம்  மேனன், இயக்குநர் கார்திக் நரேனுக்கு எந்த பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றியிருப்பதோடு, பத்ரியின் பெயரை பேனரில் போடாமல் தனது நிறுவனத்தின் பெயரை பேனரில் போட்டுவிட்டு, தற்போது இயக்குநர் கார்த்திக் நரேனிடம் பணம் பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

 

தற்போது அனைத்து விஷயங்களையும் அறிந்துக்கொண்ட பத்ரி, விரைவில் கெளதம் மேனன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளார்.

Related News

2300

பிரபலங்கள் வெளியிட்ட ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Thursday January-02 2025

ஸ்ரீ கிருஷ்ண புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...

கவனம் ஈர்க்கும் ‘எமகாதகி’ முதல் பார்வை போஸ்டர்!
Wednesday January-01 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

ஜெயலட்சுமி இயக்கத்தில் லிங்கேஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம்!
Wednesday January-01 2025

ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...

Recent Gallery