‘மெர்சல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காததால், இப்படத்தை ‘விஜய் 62’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இதற்கிடையே, விஜயின் 63 வது படத்தை இயக்கும் இயக்குநர் யார்? என்ற விவாதம் கோடம்பாக்கத்தில் நடந்துக்கொண்டிருக்க பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அட்லீ, இந்த பட்டியலில் இருந்து சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதே சமயம், விஜயின் ஜில்லா படத்தை இயக்கிய நேசன் மற்றும் மோகன் ராஜா ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், யாரும் எதிர்ப்பார்க்கத அளவுக்கு விஜயின் 63 வது படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜயின் அடுத்தப் படத்தை வெற்றி மாறன் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. தற்போது ‘வட சென்னை’ படத்தை இயக்கி வரும் வெற்றி மாறன், இப்படத்தை மூன்று பாகமாக வெளியிட முடிவு செய்துள்ளாராம். இதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பில் இருப்பவர் விரைவில் விஜயை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், வெற்றிமாறன் படத்தின் விஜய் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...