சரத்குமார், மீனா, வடிவேலு ஆகியோரது நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாயி’. இதில் வடிவேலு பெண் பார்க்க போகும் காட்சி ஒன்றில் மின்னல் என்ற வேடத்தில் நடித்தவர் தீபா. இந்த காமெடி காட்சி பிரபலமானதால் தீபாவும் சினிமாவில் கொஞ்சம் பிரபலமானார்.
ஆனால், போதிய சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒதுங்கியிருந்தவர் தற்போது பிரபல டிவி சேனலில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது சினிமா அனுபவம் குறித்து பேசியுள்ள தீபா, “நான் முதலில் மாயி படத்தில் நடித்தேன். அதன் பிறகு எனக்கு சினிமா ஆர்வம் தொற்றிக் கொண்டது. பேர் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது. காரணம், சினிமாவில் நடிப்பை விட முக்கியமாகப் பெண்களிடம் அட்ஜஸ்ட்மெண்டை தான் எதிர்ப்பார்க்கிறார்கள். அதனால் தான் எனக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
வலியபோய் வாய்ப்பு கேட்டால் அட்ஜச்ட்மெண்டுக்கு ரெடியா, என்று நேரடியாகவே கேட்கிறார்கள். இதனாலே யாரிடமும் வாய்ப்பு கேட்க போனதில்லை. என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனை நினைத்து பல தடவை நான் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.” என்றார்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...