வசூல் ஹீரோவாகியுள்ள சிவகார்த்திகேயன் நடிக்கும் சில படங்கள் அப்படி...இப்படி...என்று இருந்தாலும், ஓபனிங் சிறப்பாக இருப்பதால் அவரது படங்களுக்கு மவுசு கூடிக்கொண்டே போகிறது. அதே சமயம், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அனைத்துப் படங்களும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களாகவும், முன்னணி ஹீரோயின், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெறும் படமாகவும் உள்ளது.
நயந்தாரா, சமந்தா என்று முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி போடுவதில் ஆர்வம் காட்டி வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக தற்போதைய முன்னணி ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்குடன் ஜோடி போடுகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், தனது அடுத்த ஜோடியாக சிவகார்த்திகேயன் சாய் பல்லவியை தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.
‘பிரேமம்’ படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ள சாய் பல்லவியை எப்படியாவது தங்களது பத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று பல முன்னணி ஹீரோக்கள் முயற்சித்து வருகிறார்கள். அதன்படி சூர்யாவுடன் ’என்.ஜி.கே’ படத்தில் நடிக்கும் சாய் பல்லவி, தனுஷுடன் ‘மாரி 2’ விலும் நடித்து வருகிறார். இப்படி அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தாலும், அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ராங்கு காட்டி வருகிறாராம். அதிலுடம் தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களிடம் ரொம்பவே ராங்கு காட்டும் சாய் பல்லவி குறித்து ‘கரு’ பட ஹீரோவும், ஞானியும் ஏற்கனவே புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
என்னதான் அவர் ராங்கு காட்டினாலும் அவர் தான் தனது அடுத்த ஜோடி என்ற முடிவில் சிவகார்த்திகேயன் அழுத்தமாக இருப்பதால், அவருடன் சாய் பல்லவியை ஜோடி சேர்க்க இயக்குநர் ராஜேஷ் முயற்சித்து வருகிறாராம்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...