திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என இரண்டுக்கும் பல வேறுபாடுகள் இருந்த காலம் மாறி, திரைப்படங்களுக்கு நிகராக தொலைக்காட்சி தொடர்களும் உருவாகி வரும் நிலையில், சினிமாவைப் போலவே காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்று சீரியல்களிலும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
ஆனால், கடந்த கால சீரியல்கள் என்பது முற்றிலும் மாறுபட்டதாகும். அப்படிப்பட்ட சீரியல் காலத்தில் இருந்து நடித்து வருபவர் தான் ஸ்ரீதுர்கா. ரொம்ப அமைதியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ரீதுர்கா, கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை நிறுத்திவிட்ட நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டில் ஒன்றில் கூறிய ஸ்ரீதுர்கா, டியூபில் அவரைப் பற்றி பல தவறான தகவல்கள் உலா வருவதாகவும், அவை அனைத்தும் முழுக்க முழுக்க தவறான தகவல்கள் என்றும் கூறினார். மேலும், தனது ரசிகர்கள் யாரும், அந்த தகவல்களை நம்ப வேண்டாம், என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் ஸ்ரீதுர்கா, டிவி சீரியர் மற்றும் திரைப்படங்கள் என இரண்டிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...