டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருக்க கூடிய நட்சத்திரங்களில் சிம்பு முக்கியமானவர். எஸ்.டி.ஆர் என்ற பெயரோடு அவரது ட்விட்கள் அனைத்தும் அவரது ரசிகர்களைக் கடந்து நெட்டிசன்களிடம் படு வேகமாக சென்றடையும்.
இந்த நிலையில், ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக தான் விலகுவதாக, சிம்பு அறிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிம்பு, ”சமூக ஊடகங்களில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் பங்கு வகிக்க எனக்குப் பயமாக இருக்கிறது.
ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். நான் என் மனம் சொல்வதைக் கேட்கிறேன். சமூகவலைத்தளங்களில் இருந்து விலகும் முன்பு சொல்ல விரும்புவது இது தான். எப்போதும் அன்பை தேர்ந்தெடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிக் பாஸ் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஓவியாவை திருமணம் செய்துக்கொள்ள சிம்பு விருப்பம் தெரிவித்துள்ளதாக, டிவிட்டர் பக்கத்தில் தகவல் பரவியது. ஆனால், அது சிம்புவின் அதிகாரப்பூர்வமான கணக்கு இல்லை என்றும், சில விசமிகள் போலியான கணக்கை தொடங்கி இப்படி வதந்திகளை பரப்பி வருவது பிறகு தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்தும் சிம்பு விளக்கம் அளித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது...
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம்...
பான் இந்தியா அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படமான ’ஹனுமா’னின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்வலான ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இணைந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா அறிவித்துள்ளார்...