தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்கா, ஆரம்பத்தில் தனது சினிமா பயணத்தை தோல்வியோடு தான் தொடங்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா என்று இரு மொழிகளில் அவர் நடித்த படங்கள் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது.
இதற்கிடையே, அருந்ததீ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் வெற்றி நாயகியாக உருவெடுத்தவர், அதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் தன் வசம் ஈர்த்தார். அதில் இருந்து தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், ‘பாகுபலி’ உள்ளிட்ட சில படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையையும் வெளிக்காட்டினார்.
தற்போது உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்தி வரும் அனுஷ்காவின் நீண்ட கால ஆசை ஒன்று நிறைவேறியுள்ளது. மலையாளப் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் அவரது நீண்ட கால ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே இருந்த நிலையில் தற்போது மம்முட்டி அதை நிறைவேற்றியுள்ளார்.
மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்காவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவரை ஹீரோயினாக போடும் படி நடிகர் மம்முட்டி தான் கூறினாராம்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...