சுமார் 900 படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் அல்வா வாசு, உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் இருக்கிறார்.
’அமைதிப்படை’ படத்தில் அம்மாவாசை சத்யராஜுக்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்ஹ்ட வாசு, அப்படம் முதல் அல்வா வாசு என்ற பெயரில் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அல்வா வாசு பிறகு நடிகராகி, ரஜினிகாந்தின் அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்ததோடு, வடிவேலுடன் இவர் இணைந்து நடித்த பல காமெடிக் காட்சிகள் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்து விடும், அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர்.
தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் அல்வா வாசுவின் உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்பதால், திரையுலகினர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.
அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...