ஒளிப்பதிவில் சாதித்த நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம், தற்போது நடிப்பிலும் சாதிக்க வேண்டும் என்பதில் ரொம்பவே முனைப்போடு இருக்கிறார். அவரது முயற்சிக்கு ‘சதுரங்க வேட்டை’ கைகொடுக்க, அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் நட்டி, தனக்கு ஏற்ற கதாபாத்திரம் மற்றும் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வரிசையில், நட்டி தற்போது ஒரு திரில்லர் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். இப்படத்தை இரட்டை இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்குகிறார்கள். ‘ஆ’ மற்றும் ‘அம்புலி’ படங்களை இயக்கியுள்ள இவர்கள், தற்போது நட்டியை வைத்து இயக்கும் திரில்லர் படம் குறித்து கூறுகையில், “படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது.
இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.” என்றார்கள்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...