பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வாணி கபூர். இவர் தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தனது நடிப்பு திறமையால் பலரது பாராட்டுக்களைப் பெற்ற வாணி கபூர், தொடர்ந்து தமிழில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் பாலிவுட் சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இதற்கிடையே, ‘ஆஹா கல்யாணம்’ உள்ளிட்ட பல படங்களில் அழகும், இளமையும் நிறைந்த வாணி கபூர், தற்போது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வித்தியாசமாக காட்சியளிக்கிறார். அவரது இத்தகைய தோற்ற புகைப்படத்தைப் பார்க்கும் ரசிகர்கள், “என்ன ஆச்சி இவருக்கு...” என்று கேட்கிறார்கள்.
வாணி கபூரின் இத்தகைய மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று விசாரித்ததில், அவர் செய்துக்கொண்ட பிளாஷ்டிக் சர்ஜரியால் தான் அவரது முகத்தோற்றம் மாறிவிட்டது, என்று பலர் கூறினார்கள்.
அதே சமயம், இதை மறுத்துள்ள வாணி கபூர், உடல் எடையை குறைக்க விரும்பினேன். அதற்கான உடற்பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். அப்போது என் முகத்தோற்றம் மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் கேமராவில் ஒவ்வொரு கோணத்திலும் வெவ்வேறு மாதிரி முகம் தெரிய தொடங்கிவிட்டது, என்று தெரிவித்துள்ளார்.
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...