நடிகர்களுக்கு பட்டப் பெயர் வைத்துக்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்த நிலையில், தற்போது சில நடிகர்கள் தங்களது பெயருக்கு முன்பு பட்டப் பெயர்களை போட்டுக்கொள்ள விரும்புவதில்லை. அப்படி இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் பட்டப் பெயர் போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்கிடையில், விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை இயக்குநர் சீனு ராமசாமி வழங்கினார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு போட்டியாக சிவகார்த்திகேயனுக்கும் புதிய பட்டப் பெயரை பிரபல தொலைக்காட்சி வழங்கியுள்ளது.
ஆரம்பத்தில் டிவி சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன், தற்போது அந்த டிவி சேனல் எந்த நிகழ்ச்சிக்கு, எத்தனை முறை அழைத்தாலும் தவறாமல் கலந்துக்கொள்கிறார். அப்படி சமீபத்தில் அந்த டிவி சேனலின் விழா ஒன்றில் அவர் கலந்துக்கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் குறித்து ஒளிபரப்பட்ட வீடியோவில், ’என்டர்டெயின்மென்ட் கிங்’ என்ற பட்டப் பெயருடன் சிவகார்த்திகேயனின் பெயர் இடம்பெற்றது.
எனவே, இனி சிவகார்த்திகேயனின் படங்களில் அவர் பெயர் இடம்பெறும் போது இந்த பட்டப் பெயர் உடன் தான் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...