மலையால சினிமாவின் பிரபல நடிகரான கொல்லம் அஜித், இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
1983 ஆம் ஆண்டு வெளியான ‘பரன்னு பரன்னு பரன்னு’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமான அஜித், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
வில்லன் வேடங்களில் அதிகமாக நடித்து வந்த இவர், 1990 களில் மலையால சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக திகழ்ந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘இவன் அர்த்தநாரி’ தான் அஜித் நடித்த கடைசி படம்.
கடந்த சில மாதங்களாக வயிறு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். பிறகு சிகிச்சை முடிந்ததும் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு வீட்டு ஓய்வில் எடுத்து வந்தவரின் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் சமீபத்தில் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...