ராம் இயக்கத்தில், அறிமுக ஹீரோ வசந்த் ரவி, ஆண்டிரியா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தரமணி’ ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதோடு, ஊகங்களிடமும் பாராட்டு பெற்றுள்ளது. இதன் காரணமாக படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரை போனில் அழைத்து பாராட்டியதோடு, படத்தின் வெற்றி மற்றும் வசூலைப் பற்றி கேட்டறிந்தாராம்.
மேலும், இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரின் நடிப்பு மற்றும் கதாபாத்திரம் குறித்து விவரமாக பேசி பாராட்டு தெரிவித்ததோடு, தரமணி போன்ற ஒரு துணிச்சலான படம் வெற்றி பெற்றிருப்பது தனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது, என்றும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் போன்ற ஒரு ஜாம்பவானின் பாராட்டால் மகிழ்ச்சியில் இருந்த ‘தரமணி’ குழு மேலும் உற்சாகமடைந்திருப்பதோடு, மேலும் இதுபோன்ற தரமான படங்களை தயாரிக்க, ரஜினிகாந்த் போன்ற பெரிய மனிதர்களின் பாராட்டு தனக்கும், தனது நிறுவனத்திற்கும் ஊக்கமாக உள்ளது, என்று ஜே.சதீஷ்குமார் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.
செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்...
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...