‘தப்பாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். முதல் படத்திலேயே பட்டப் பெயரா! என்று ஆச்சரியப்பட வேண்டாம், இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பே பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு இந்த பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
‘தப்பாட்டம்’ படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கும் துரை சுதாகர், பிக் பாஸ் புகழ் ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதோடு, முன்னணி இயக்குநர் ஒருவரது படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
சினிமாவில் பிஸியாக இருந்தாலும், அவ்வபோது ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் பப்ளிக் ஸ்டார் சினிமாத் துறையைச் சேர்ந்த மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் சமூக பணிகளுக்காக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘சர்வதேச அமைதி பல்கலைக்கழகம்’ (International Peace University) டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் துரை சுதாகர் டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...