தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் கடந்த ஒன்றரை மாதமாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகவில்லை.
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ள தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள், வரும் 8 ஆம் தேதி முதல் தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம், என்று அறிவித்துள்ளனர். தற்போது வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படமான ரங்கஸ்தலம் படத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ், பிரபு தேவாவை வைத்து தான் இயக்கியுள்ள ‘மெர்க்குரி’ என்ற படத்தை வரும் மார்ச் 13 ஆம் தேதி ரிலீஸ் செய்வேன் என்று அறிவித்துள்ளார்.
இன்று அப்படத்தின் டிரைலர் வெளியாவதாக இருந்தது. ஆனால், காவேரி வாரியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடந்ததால், இன்று டிரைலரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிடவில்லை. இன்னும் சில தினங்களில் டிரைலரை வெளியிடப் போவதாக அறிவித்துள்ள அவர், எந்தவித தடை போட்டாலும், அதை எதிர்த்து வரும் மார்ச் 13 ஆம் தேதி தனது ‘மெர்க்குரி’ படத்தை வெளியிடுவேன், என்றும் கூறியுள்ளார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...