பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டாவது முறையாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘காலா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் தொடர்வதால், இம்மாதம் படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக பகுதிகளில் ‘காலா’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம், என்று கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் ரஜினி தரப்பு ரொம்பவே சோகத்தில் இருக்கிறார்களாம்.
இந்த நிலையில், ’காலா’ படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அதிகாரிகள் 14 கட் கொடுத்திருக்கிறார்களாம். இத்தனை கட் கொடுத்த பிறகும் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களாம்.
இதனால், தணிக்கை விவகாரத்தில் அதிருப்தியடைந்திருக்கும் ‘காலா’ படக்குழு மறுதணிக்கைக்குச் செல்லும் முடிவில் இருக்கிறதாம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...