தொடர் தோல்விப் படங்களினால் துவண்டு போயிருந்த ஆர்யா, தற்போது சற்று உற்சாகமடைந்துள்ளார். காரணம், டிவி நிகழ்ச்சி ஒன்றில் அவரை 16 பெண்களுடன் பழகுவிட்டது தான் என்று நினைத்துவிட வேண்டாம். அவரது முதல் டிவி நிகழ்ச்சியான அந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றது தானாம்.
போட்டியில் பங்கேற்ற 16 பெண்களில் தற்போது 5 பேர் தேர்வாகியுள்ளனர். போட்டியின் சுறுதிச் சுற்று நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஆர்யா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார், அவரது திருமணம் நடக்குமா, நடக்காதா, என்பது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆர்யாவை அந்த டிவி சேனல் கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம், ஆர்யாவின் நிகழ்ச்சியால் அந்த டிவி சேனல், டி.ஆர்.பி ரேட்டிங்கில் அதிரடியாக முன்னேறியுள்ளது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட அந்த டிவி சேனல், தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் 5 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் 106234 ஆயிரம் பேர் இந்த தொலைக்காட்சியை பார்த்துள்ளனர். இதற்கு காரணம் ஆர்யாவின் நிகழ்ச்சி தானாம்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...