தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கடந்த ஒன்றரை மாதமாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஆதரவுடன் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தினால் கடந்த ஒன்றரை மாதமாக எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகததோடு, படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கும் அதிக கட்டணத்தை குறைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தி இந்த போராட்டத்தை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வருகிறது. மேலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் எப்போது முடியும், என்பதே தெரியாமல் போய்க்கொண்டிருக்க, இதனால் திரையரங்க ஊழியர்கள் பணி இழந்ததோடு, சினிமா தொழிலாளர்களும் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஸ்டிரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன், என்று பிரபல சினிமா பிரமுகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளரான் தனபால், என்பவர் விஷால் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியதோடு, விஷால் - செல்வமணி கூட்டணியோடு சில தவறுகளை செய்து வருவதாகவும், அவர்களாலே தங்களது தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படியே இவர்கள் செய்து வந்தால் நான் விஷால் முன் கண்டிப்பாக தீக்குளிப்பேன். அப்படி இறந்தால் தான் எல்லோருக்கும் தெரிய வருகிறது, என்றும் கூறியிருக்கிறார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...