காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மவுன போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பற்கேற்க செல்கிறேன். வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்கவில்லை என்றால், தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும்.
விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதை மூடிதான் ஆக வேண்டும். இப்போதைக்கு தனியாக போராட்டம் எதுவும் நடத்தப் போவதில்லை.
ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடினால் நாடு முழுவதும் கவனத்தை பெறலாம்.” என்று தெரிவித்தார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...