பிரபல மாடலாக இருந்த ஜனனி ஐயர், ‘திரு திரு துறு துறு’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர், பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ’பாகன்’, ‘தெகிடி’, ‘அதே கண்கள்’, ’பலூன்’, ‘விதி மதி உல்டா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததோடு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து வரும் ஜனனி ஐயருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இருந்தாலும், சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும், மாடலிங் துறை எனது கையில் இருக்கிறது. அது எனக்கு கைகொடுக்கும், என்று தன்னம்பிக்கையோடும் அவர் வலம் வருகிறார்.
இந்த நிலையில், ஜனனி ஐயர் பற்றி இதுவரை தெயாத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதை அறிந்த அவரது ரசிகர்கள் ரொம்பவே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதாவது, ஜனனி ஐயர் என்ஜினியரிங் படித்தவராம். அவர் படிப்புக்கு ஏற்ற வேலையை அவர் தேடியிருந்தால், இன்றைக்கு எதாவது ஒரு சாப்ட்வேட் கம்பெனியில் இருந்திருப்பாராம், அல்லது வெளிநாட்டில் எங்கேயாவது வேலை செய்துக் கொண்டிருப்பாராம். படித்த துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்று விரும்பாமல், சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று ஜனனி விரும்பினாராம். அவரது விருப்பத்திற்கு அவரது அம்மா ஆதரவாக இருந்ததால், தற்போது அவர் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
ஜனனி ஐயர் ஒரு என்ஜினியரிங் பட்டதாரி என்ற தகவல் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த தகவலை அவரே பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறினார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...