தியேட்டர்களில் திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிடும் சேவையை அளித்து வரும் நிறுவனங்கள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், இதற்கான நிரந்தர தீர்வு காண, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதமாக புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை. மேலும், தெலுங்கு திரைப்படங்கள் வெளியாவதும் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு, தொழிலாளர்கள் சம்மேளனமும் ஆதரவு அளித்துள்ளதால், படப்பிடிப்புகளும் நடைபெறாமல் உள்ளது. இதனால் சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வேலை நிறுத்தம் எப்போது முடியும், என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிஜிட்டல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏரோக்ஸ் (AEROX) நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டி.சி.ஐ (DCI) அங்கீகாரம் பெற்ற நிறுவனமான ஏரோக்ஸ் (AEROX) மற்ற டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைவான கட்டணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இதன் மூலம் சிறு பட தயாரிப்பாளர்கள் லாபம் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர்களின் ஒரு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்கங்களில் டிக்கெட் விற்பனை முறையை கனினி மயமாக்குதலும் நிறைவேறிவிட்டால், அவர்களது போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...