பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சினிமா தொழிலாளர்களுக்கு நன்கொடையாக ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. புதிய திரைப்படங்கள் ரிலிஸுக்கு தடை, படப்பிடிப்புகள் ரத்து, சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை பல்வேறு தடைகளோடு நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தால் தமிழ் சினிமாவே ஸ்தம்பித்துள்ளது.
மேலும், ஒன்றரை மாதமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களது நலனுக்காக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
எஸ்.ஆர்.பிரபுவின் நன்கொடையை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் சினிமா தொழிலார்கள் சங்கமான பெப்ஸிக்கு நன்கொடை வழங்க முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...