காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட நிலையில், நடிகர் அஜித் பங்கேற்கவில்லை.
போராட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டதால், அஜித் போராட்டம் முடிவதற்குள் வந்துவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி வரை அஜித் போராட்டத்தில் கலந்துக்கொள்ளாதது, நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது.
ரசிகர்கள் வேண்டாம், தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன், என்று சில கட்டுப்பாடுகளுடன் வாழும் அஜித், இதற்கு முன்பு சில பிரச்சினைகளுக்காக நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றிருப்பதால், இன்று நடைபெறும் போராட்டத்திலும் அவர் பங்கேற்பார் என்ற அனைவரது எதிர்ப்பார்ப்பையும் அவர் ஏமாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில், அஜித் போராட்டத்தில் பங்கேற்காதது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சிலர், அஜித் ரசிகர்கள் வேண்டாம் என்று முடிவு எடுத்தது போல, தற்போது தமிழர்களும் வேண்டாம், அவர்களது பிரச்சினையும் வேண்டாம், என்று முடிவு எத்துவிட்டார் போலிருக்கு, என்று கூறி வருகிறார்கள்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...