காவிரி மற்றும் ஸ்டெலைட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் கலந்துக் கொண்டாலும் நயந்தாரா, ஹன்சிகா, திரிஷா என்று முன்னணி நடிகைகள் யாரும் பங்கேற்கவில்லை. அதேபோல், அஜித்குமாரும் பங்கேற்கவில்லை. இருந்தாலும், இந்த போராட்டத்தில் நடிகர், நடிகைகள் மட்டும் இன்றி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என ஒட்டு மொத்த திரையுலகினரும் கலந்துக்கொண்டார்கள்.
தமிழர்கள் பிரச்சினைக்காக இப்படி ஒட்டு மொத்த திரையுலகமே போராடிக் கொண்டிருக்கும் இதே வேலையில், கவர்ச்சி நடிகை ஷகிலாவையும் இதே தமிழ் சினிமா கொண்டாடவும் செய்திருக்கிறது.
ஆம், கடந்த ஒன்றரை மாதமாக தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் எந்த புதிய திரைப்படங்களும் வெளியாகவில்லை. மேலும், பிற மொழி திரைப்படங்களும் வெளியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. இதனால், திரையரங்கை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாத, தியேட்டர் உரிமையாளர்கள் 80 களில் வெளியான படங்களையும், பிற ஆங்கிலப்படங்களையும் வெளியிட்டு திரையரங்கை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கோவையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கவர்ச்சி நடிகை ஷகிலா வாரம் என கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு வாரம் முழுவதும் ஷகிலா நடித்த பலான படங்களை திரையிடும் இந்த திரையரங்கம் அதற்கான விளம்பரங்களையும் ரொம்ப ஜோராக செய்திருக்கிறது.
கோவை மாநகரில் திரும்பும் பக்கமெல்லாம் ‘ஷகிலா வாரம்’ என்ற தலைப்போடு, அவரது கிளுகிளுப்பான படங்களின் தலைப்புகளோடும் இருக்கும் இந்த போஸ்டர்கள் தற்போது கோவை மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், சமூக வலைதளங்களில் வெளியாக நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதனால், இன்று நடைபெற்ற நடிகர்களின் போராட்டத்தைக் காட்டிலும் இந்த ஷகிலா கொண்டாட்டம் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தியாக உருவெடுத்து வருகிறது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...