காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், என்பதையும் வலியுறுத்தி நடிகர், நடிகைகள் இன்று சென்னையில் மவுன போராட்டம் நடத்தினார்கள்.
ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் அஜித், சிம்பு, அர்ஜுன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிகர்களும், முன்னணி நடிகைகள் பலரும் கலந்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், போராட்டத்தில் தான் ஏன் கலந்துக் கொள்ளவில்லை, என்பதற்கான விளக்கம் அளித்த சிம்பு, தன்னை போராட்டத்திற்கு யாரும் அழைக்கவில்லை, அதனால் தான் போராட்டத்தில் பங்கேற்கவில்லை, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திரைத்துறையில் பல பிரச்சினைகள் இருக்கும் போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் தனக்கு உடன்பாடில்லை, என்று தெரிவித்த சிம்பு, ரொம்ப நாளாக தமிழ்நாட்டிற்கு எதாவது ஒரு பிரச்சினை வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அது என்ன என்று பார்த்தால், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல உள்ளது.
இங்கு போராட்டம் நடத்துகிற அரசியல்வாதிகள் யாரும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அவர்கள் எல்லோரும் அரசியல் செய்கிறார்கள், இதை அரசியலாக்கி ஓட்டாக்க பார்க்கிறார்கள், என்றும் கூறினார்.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...