‘யூ-டர்ன்’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ ஆகியப் படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது, ‘மிலன் டாக்கீஸ்’ (Milan Talkies) என்ற இந்தி படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் ஷரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தமிழ்ப் படங்களில் நடித்துவிட்டு இந்தி படத்தில் நடிப்பது எப்படி இருக்கிறது? என்று பேட்டி ஒன்றில் ஷரத்தா ஸ்ரீநாத்திடம் கேட்டதற்கு, “எனக்கு பெரிய வித்தியாசம் தெரிகிறது. பாலிவுட்டில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.
அப்படியனால், தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாகவும், திறமை இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள், என்று ஷரத்தா ஸ்ரீநாத் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். அவரது இத்தகைய பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...