சினிமா மற்றும் சீரியலை தாண்டி, தற்போது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருவது வெப் சீரிஸாகும். இனி வரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கிய இடம் வகிக்கும் என்பதால், முன்னணி கலைஞர்கள் பலர் வெப் சீரிஸ் மீது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அப்பு மூவிஸ் ‘எ ஸ்டோரி’ (A Story) என்ற வெப் சீரிஸை தயாரித்திருக்கிறது. நிமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தின் இயக்குநர் நிமேஷ் ‘மல்லி’ என்ற குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த வெஸ் சீரிஸை அப்பு மூவிஸ் சார்பில் தயாரித்துள்ள பாபு தூயவன், ‘கதம் கதம்’, ‘இட்லி’ ஆகிய திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.
இந்த நிறுவனம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே 'அப்பு மூவிஸ்' எனும் யுடியூப் சேனலை தொடங்கி, தமிழ் சினிமாவின் வியாபாரம் பற்றிய தகவல்களை இயக்குனர் கேபிள் சங்கர் அவர்கள் மூலம் அளித்திருந்தனர். இந்த சேனலின் கிரியேட்டிவ் ஹெட் - கேபிள் சங்கர். அதுமட்டுமில்லாமல் ஜோதிடம், ஸ்டாண்டப் காமெடி, ஷாட் பிலிம்ஸ், சமையல் நிகழ்ச்சிகள் என பலவிதமான விடீயோக்களை அளித்திருந்தனர். தற்போது முதன் முறையாக ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற இந்த வெப் சீரிஸை தயாரிக்கின்றனர்.
இந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, பிரவீன் பாஸ்கர் என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.
’பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’ மற்றும் 'தைரியமான ... சொல்லப்படாத கதை' என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான டிரைலரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் ‘எ ஸ்டோரி’ (A Story) வெப் சீரிஸ் 'அப்பு மூவிஸ்' யுடியூப் சேனலில் வெளியாகவிருக்கிறது.
பிரபல மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் ‘மெட்ராஸ்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்...
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...