ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மகேஷ் பாபுவுக்காக, சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இவ்விழா, கோடம்பாக்கத்தின் மிக பிரம்மாண்டமான விழாவாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘ஸ்பைடர்’ படத்திற்காக மகேஷ் பாபு, தனது சொந்த குரலிலில் தமிழ் டப்பிங் பேசியிருப்பது இப்படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய ஹீரோவாக இருந்தாலும், செய்வதை சரியாக செய்ய வேண்டும் என்ற காரணத்தால், தமிழில் சொந்தமாக டப்பிங் பேச வேண்டும் என்ற மகேஷ் பாபு அவர்களின் இந்த தொழில் பக்தியும், நேர்மையும் தான் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவரது தமிழும், தமிழ் உச்சரிப்பும் சிறப்பாக உள்ளது. சென்னையில் அவர் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தது அவரது தமிழிற்கு மிகவும் தவியுள்ளது. சென்னையுடனான நெருக்கம், அவரை இங்கும் வெற்றி பெற, பெரிய உந்துலதாக இருக்கின்றது, என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ‘தாகூர் பிலிம்ஸ்’ மது கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...