நடனம், நடிப்பு என்று சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் பிஸியாக இருந்த நடிகை நீபா, கடந்த பல வருடங்களாக எங்கும் தலைக்காட்டவில்லை. காரணம் கல்யாணம் தான்.
சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் நீபா, விஜயின் ‘காவலன்’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து காமெடியில் கலக்கினார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு காமெடி வாய்ப்புகள் வந்தாலும் அதை நிராகரித்தவர், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டவர். அப்படியே நடிப்புக்கும் ரெஸ்ட் கொடுத்துவிட்டார்.
தற்போது நீபாவுக்கு அழாகா ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குடும்பம், குழந்தைகள் மீது கவனம் செலுத்துவதால் நடிப்பதை தவிர்த்து வருபவர், நடனத்தை மட்டும் கைவிடவில்லை.
தனது வீட்டிலேயே நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பித்திருப்பவர் நிறைய குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து வருகிறார். சீக்கிரமே டான்ஸுக்கான இன்ஸ்டிட்யூட் ஒன்றையும் ஆரம்ப திட்டமிட்டுள்ளாராம்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...