‘மனுசனா நீ’ படத்தை இயக்கி தயாரித்து நடித்த கஸாலிக்கு திரையரங்க உரிமையாளர் சதரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியான ‘மனுஷனா நீ’ படத்தினை கிருஷ்ணகிரி முருகன் திரையரங்கில் திடுட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனை பாரான்சிக் வாட்டர் மார்க் முறையில் கண்டுபிடித்த கஸாலி, கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் உரிமையாளர் முருகன் மற்றும் ஆபரேட்டர் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இருவரையும் பிப்ரவரி 27 ஆம் தேதி கைது செய்த போலீசார், கியூப் நிறுவனத்தின் புரக்டர் மற்றும் சர்வரை பறிமுதல் செய்தனர்.
இதன் காரணமாக முருகன் தியேட்டர் உரிமையாளரின் மகன் பாலாஜி என்பவ, தயாரிப்பாளர் கஸாலியை வழக்கை வாபஸ் வாங்க வைக்க வேண்டும் என்று முயற்சித்து செய்தார். ஆனால், கஸாலி இந்த விசயத்தில் உறுதியாக இருந்தார். இதனால், அந்த தியேட்டரில் வேலை செய்யும் துரைராஜ் என்பவரை, கஸாலி அடியாட்களுடன் கிருஷ்னகிரிக்குச் சென்று அடித்து உதைத்ததுடன், அவரது ஜாதியை சொல்லி திட்டியதாகவும், புரஜக்டர் மற்றும் சர்வரை தூக்குக்கொண்டு வந்ததாகவும் பொய்யான புகார் அளித்துள்ளாராம்.
மேலும், கஸாலியை முகம் தெரியாத ஆட்கள் அவரது வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள கஸாலி, ஒரு தயாரிப்பாளரின் படம் ரிலீசான அன்றே திருடப்பட்டால் அந்தத் தயாரிப்பாளருக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று தெரிந்திருந்தும், பொறுப்பில்லாத சில தியேட்டர்களின் செயலால் தமிழ்த் திரையுலகமே நஷ்ட்டத்தில் தத்தளிக்கிறது. கண்டுபிடித்து நஷ்ட ஈடு கேட்டால், கொலை மிரட்டல் அளவுக்குச் செல்லும் கிருஷ்ணகிரி முருகன் தியேட்டர் போன்றவர்கள் சரியானபடி தண்டிக்கப்படால் தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் சரியாக அமையும், என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...