கேரளாவை சேர்ந்த பிரபல எப்.எம் ரேடியோவில் ஜாக்கியாக பணியாற்றி வரும் ராஜேஷ் கடந்த மார்ச் மாதம் கொலை செய்ய செய்யப்பட்டார்.
தனியாக ஸ்டுடியோ வைத்திருந்த ராஜேஷ், அதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று நிகழ்ச்சி நடத்தி வந்த நிலையில், நள்ளிரவில் ஸ்டுடியோவில் வைத்து மர்ம கும்பல் அவரை கொலை செய்தது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், துபாயில் தலைமறைவான 4ம் குற்றவாளியான சலிஹ் பின் ஜலாஜ் என்பவரை துபாய் போலீசின் உதவியோடு கேரள போலீசார் கைது செய்தனர்.
மேலும், இரண்டாம் குற்றவாளியான அப்துல் சதார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு முன்பாக ஆயுதம் சப்ளை செய்ததற்காக சனு என்பவரும், குற்றவாளிகள் வெளிநாடு தப்ப உதவிய சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் போலீசார் நடத்திய விசாரணையில் அப்துல் சதாரின் மனைவி துபாயில் பிரபல டான்சராக இருக்கிறாராம். துபாயில் சில ஆண்டுகள் தங்கியிருந்த ராஜேஷ் மீது வந்த போட்டி பொறாமை காரணமாக அவரை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...