காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருபவர்கள், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகவும் போராட தொடங்கியுள்ளார்கள். சமீபத்தில் தொடங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியால் காவிரி போராட்டங்கள் செயலிழந்து போகும் என்பதால், ஐபில் கிரிக்கெட் போட்டிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையே, நேற்று சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சினிமா துறையை சேர்ந்தவர்களும், அரசியல் துறையை சேர்ந்தவர்களும் இணைந்து சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில், சிலர் சீருடையில் இருக்கும் காவலர்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், சிலர் ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.” என்று கூறியுள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...