பிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினி கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில், திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.
கார்த்தியின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என்றும், அவரது டார்ச்சரால் தான் கார்த்தி இந்த முடிவை எடுத்தார், என்றும் அவரது குடும்பத்தினர் மைனா நந்தினி மீது குற்றம் சாட்டி வந்தனர். அதே சமயம், அவர்களது குற்றச்சாட்டை மறுத்த மைனா நந்தினி, கார்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் தான் அவரை விட்டு பிரிந்ததாகவும், அவருக்கு இருந்த கடன் தொல்லைகளினால் தான் அவர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கூறினார்.
இந்த நிலையில், மைனா நந்தினியும், கார்த்தியின் பெற்றோரும் பேசும் தொலைபேசி பேச்சு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மைனா நந்தினி, திருமணத்திற்கு முன்பே அபார்ஷன் செய்துக்கொண்டார் என்று கூறும் கார்த்தி குடும்பத்தார், திருமணத்திற்கு பிறகு நடனம் ஆட வேண்டும், நடிக்க வேண்டும், எனது அப்பாவுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும், அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன், என்று கூறி இரண்டாவது முறையாகவும் அபார்ஷன் செய்துக்கொண்டார். மேலும், வேறு ஒரு ஆணுடன் ஓட்டலில் தங்கியிருக்கிறேன், என்று எனது மகனிடம் கூறுவார். அதனால் தான் என் மகன் தற்கொலைக்கு முடிவுக்கு வந்தான், என்றும் கார்த்திக் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இணையத்தில் வைரலாகும் இந்த தொலைபேசு பேச்சால் மைனா நந்தினி விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...