தனுஷ் நடிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றியும் பிரம்மாண்டமாகவே அமைந்துள்ளது.
தமிழகம் மட்டும் இன்றி மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் வெளியாகத வகையில் வெளியான இப்படம் வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க, வரும் 18 ஆம் தேதி இந்தியில் வெளியாகிறது.
தமிழைப் போல பாலிவுட்டிலும் தனுஷ் பிரபலம் என்பதாலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடித்திருப்பதாலும் படத்திற்கு பாலிவுட்டிலும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் தமிழில் இப்படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்தியில் 1200 க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில் ‘விஐபி-2’ படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...