Latest News :

உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ!
Thursday April-12 2018

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.. 

 

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்..

 

“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள். 

 

இன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.

 

உலகம் முழுவதிலும் இதற்கு தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதை சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலரவைத்து அதன்பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.

 

ஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே  கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.   

 

அதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஓட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும்.. சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.

 

சரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக்கொண்டுவந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர்  கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.

 

இதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதை கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்த கண்டுபிடிப்பை கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.

 

இதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது. 

 

வழக்கமான ஷாம்பூவை பயன்படுத்துவதை போல இதை பயன்படுத்த முடியும்.. கைகளை தண்ணீரால் ஈரமாக்கிக்கொண்டு நமக்கு தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக்கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரைமுடியை தெரியவிடாமல் தடுக்கும்.

 

இன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாக சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” என பெருமை பொங்க கூறுகிறார் ஆர்கே...

Related News

2380

”அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்” - ஆகாஷுக்கு நம்பிக்கை அளித்த சிவகார்த்திகேயன்
Saturday January-04 2025

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...

பிரபலங்கள் வெளியிட்ட ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Thursday January-02 2025

ஸ்ரீ கிருஷ்ண புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...

கவனம் ஈர்க்கும் ‘எமகாதகி’ முதல் பார்வை போஸ்டர்!
Wednesday January-01 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery