காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, இனி சென்னையில் நடைபெற இருக்கும் அனைத்து போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபில் கிரிக்கெட் போட்டி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த வெங்கட் பிரபு, “நான் ஒன்றும் சொல்லலப்பா” என்று கருத்து பதிவிட்டு இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி பெற்ற அப்போட்டி குறித்து ஏதேனும் சொன்னால் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், அதை தவிர்ப்பதற்காக வெங்கட் பிரபு கூறியது கலாய்க்கும் விதத்தில் இருந்ததால், அவருக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், அறிவுரையும் கூறியுள்ளார்.
இது குறித்து வெங்கட் பிரபுவுக்கு அறிவுரை கூறியிருக்கும் பாண்டிராஜ், “உண்மையான விவசாயி யாரும் ஐ.பி.எல். பார்க்க கூடாது என்றோ, எல்லோரும் எங்களுக்கு போராடுங்கள் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள் நாம் சாப்பிடுவதற்கு, அதுதான் விவசாயி. அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள். புரியாதவர்கள்... போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது. தயவு செய்து அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி. வெங்கட் பிரபு சார், சென்னை சூப்பர் கிங்ஸ்சை ரசியுங்கள். அது உங்கள் உரிமை. தயவு செய்து விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...