ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் குறித்து சினிமா நடிகர், நடிகைகள் பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் விஷால் ஆகியோர் நேரடியாக அரசியலிலும் இறங்கியுள்ளார்கள்.
மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறார். அதேபோல் ரஜினிகாந்தும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தான் தொடங்கும் கட்சி சார்பில் போட்டியிடுவேன், என்று அறிவித்திருக்கிறார். மேலும், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருப்பவர், மாவட்டம் வாரியாக தனது கட்சிக்கான நிர்வாகிகளையும் நியமனம் செய்து வருகிறார்.
இதனால், ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார்? என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள். அதே சமயம், ரஜினிகாந்த் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கும் அறிவிப்பு வெளியான நிலையில், அவரது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், மே மாதம் ரஜினி தீவிர அரசியலுக்கு வந்து விடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மே மாதமும் ரஜினி புதிய கட்சி அறிவிப்பை வெளியிட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே சமயம், சென்னையில் நடைபெற்ற காவிரி தொடர்பான போராட்டம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சூழ்நிலை சரியில்லை என்றும், இந்த நேரத்தில் கட்சி பெயர் அறிவிப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினால், அதற்கு எதிர்ப்புகள் தான் கிளம்பும் என்று ரஜினியின் மன்ற நிர்வாகிகள் கூறிய யோசனையை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை தள்ளிப் போட்டிருக்கிறாராம்.
எனவே, தமிழகத்தில் போராட்டங்கள் முடிந்து சூழ்நிலை சரியான பிறகே தனது கட்சி தொடக்கம் குறித்து ரஜினி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...