தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களின் இடத்தின் பிடிப்பதற்கான முயற்சியில் இருக்கும் சில நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், உதயநிதியுடன் நடித்த ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் நடனம், நடிப்பு என்று தனது திறமையை நிரூபித்தார்.
தற்போது ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’, வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ ஆகியப் படங்களில் நடித்து முடித்திருப்பவர் விஷ்ணு விஷாலுடன் ‘ஜகஜால கில்லாடி’ மற்றும் ‘திமிரு பிடிச்சவ’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, நிவேதா பெத்துராஜின் நிர்வாண வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிவேதா பெத்துராஜ், அதில் தான் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறேன், என்று கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
சமீபத்தில் ஆசிபா என்ற சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நிவேதா பெத்துராஜ், உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டவர், குழந்தைகளின் மீதான பாலியல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நெருங்கிய உறவுகளால் தான் நேர்கிறது, என்றும் தெரிவித்திருக்கிறார்.
https://www.facebook.com/ActressNivethaPethuraj/videos/1661694230582887/
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...