தெலுங்கு சினிமாவே ஆட்டம் காணும் அளவுக்கு நடிகை ஸ்ரீரெட்டியின் ஸ்ரீ லீக்ஸ் மூலம் வெளியாகும் தகவல்கள் சர்ச்சை அணுகுண்டாக வெடித்திருக்கிறது.
பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்திற்கு எதிரான போராட்டம், என்ற பெயரில் நடிகை ஸ்ரீ ரெட்டி வெளியிடும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களால் பிரபல நடிகர்களும், இயக்குநர்களும் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் மற்றொரு நடிகையும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல துணை நடிகையான சுனிதா என்பவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கத்தி மகேஷ் என்ற நடிகர் தன்னை கற்பழிக்க முயன்றதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய நடிகை சுனிதா, “நாங்கள் முதலில் பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்தோம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் அவரை நான் வாழ்த்தினேன். அவர் மனைவிக்கு தெரியாமல் ஐதராபாத்தில் ஒரு வீட்டில் என்னை சந்திக்க வேண்டும் என வரச்சொன்னார். அப்போது எங்கு என்னை வலுக்கட்டாயமாக அவர் கற்பழிக்க முயன்றார்.” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...