Latest News :

கமல் அப்படி கூறியது ஏன்? - கேள்வி கேட்கும் நடிகை கஸ்தூரி
Thursday August-17 2017

அரசியல், சினிமா என்று அனைத்து விஷயங்கள் குறித்து தினமும் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, தமிழக அரசை விமர்சித்து கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த பதிவில், ”கமல் கூறுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய திட்டங்கள் இருக்கும் என்று தெரிகிறது. அவ்வாறு பெரிய திட்டங்கள் இருந்தால் அதை அவர் தெளிவாக கூற வேண்டும் என்று நான் நேரடியாக அவருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

 

மதவாதம், ஜாதியம் பேசுவோர், மரம் வெட்டுவோருக்கு பின்னால் 4 பேர் செல்கின்றனர். நம் நாட்டில் போலி சாமியாருக் குக்கூட வரவேற்பு உள்ளது. அவ்வாறு இருக்கும் போது நல்லது செய்வதாக கிளம்பும் 4 பேருக்கு பின்னால் 4 பேர் செல்வதில் என்ன தவறு உள்ளது.

 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் பணம் பெற்றதாக வெளியான “ஸ்டிங்” ஆபரே‌ஷனை தொடர்ந்தும், குட்கா ஊழலைத் தொடர்ந்தும் தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தினமும் கேட்டுக் கொண்டு உள்ளன. இந்நிலையில் கமல் தனது டுவிட்டரில் ஏன் அப்படி கூறினார்?”, என்று தெரிவித்துள்ளார்.

Related News

240

”நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” - நடிகர் அஜித்குமார் அறிவிப்பு
Monday January-27 2025

மத்திய அரசின் மதிப்புமிக்க் பத்ம விருதுக்கு நடிகர் அஜித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

’பேட் கேர்ள்’ (BAD GIRL) திரைப்படம் க்ராஸ் ரூட் நிறுவனத்தை பெருமைப்பட வைக்கும் - இயக்குநர் வெற்றிமாறன் நம்பிக்கை
Monday January-27 2025

தரமான படைப்புகள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் மூலம் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ உள்ளிட்ட பல விருது வென்ற திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்...

Recent Gallery