நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் டிவி நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நாளையுடன் முடியப் போகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கிடையே, இந்நிகழ்ச்சியில் தேர்வான மூன்று போட்டியாளர்களில் ஒருவரான அபர்ணதி என்பவரது தங்கை, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி குறித்து பல உண்மைகளை சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், போட்டியாளர் அபர்ணிதாவே நேரடியாக வீடியோவில் தோன்றி இந்நிகழ்ச்சி குறித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் எந்த விஷயத்தை சொல்லாத அபர்ணிதா, நிகழ்ச்சி முடியும் வரை நான் எதுவும் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கிறது. அதனால், கொஞ்சம் நாட்கள் காத்திருக்கிறேன், விரைவில் நான் உங்களிடம் நேரடியாக பேசுகிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி குறித்து தனது தங்கை கூறிய அனைத்து தகவல்களும் உண்மை தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
https://www.facebook.com/2164769927127806/videos/2185683038369828/
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...