பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா ஆப்தே, தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் ‘கபாலி’ படத்திற்குப் பிறகே பிரபலமானார். இருந்தாலும், இவர் நடித்து பிரபலமானதை விட அவ்வபோது சர்ச்சையான கருத்துக்கள் கூறியே அதிக பிரபலமானார்.
அவரது சர்ச்சை கருத்துக்கள் போல, அவரது கவர்ச்சியான புகைப்படங்களும், வீடியோக்களும் அவ்வபோது பரபரப்பை ஏற்படுத்தும். அவ்வாறு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ராதிகா ஆப்தே அதற்கான பலனை தற்போது பெற்றுவிட்டார்.
ஆம், ராதிகா ஆப்தே ஹாலிவுட் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். ‘வேல்ட் வார் 2’ என்று தயாராகும் ஹாலிவுட் படத்தில் உளவாளி வேடத்தில் ராதிகா ஆப்தே நடிக்கிறார். இரண்டாம் உலகப் போர் பற்றிய படமான இப்படத்தில், ரகசிய உளவாளியாக செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நூர் இனயத் கான் தந்தை இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தான் பரம்பரையை சேர்ந்தவர். தாய் பிரானி அமினா பேகம் அமெரிக்காவை சேர்ந்தவர்.
லண்டனில் வசித்து வந்த நூர் இனயத், இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாக வேலை பார்த்தார். பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது அங்கு வானொலியில் வேலை பார்த்து ரகசியங்களை சேகரித்தார். பின்னர் ஹிட்லர் படையினர் அவர் உளவாளி என்பதை கண்டறிந்து கைது செய்து 1944-ல் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனயத்துக்கு வயது 30.
இவரது கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஹாலிவுட் படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ராதிகா ஆப்தேவுக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, அவர் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்களால் தான், என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஜீவா, ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், பா...
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த திரைப்படம் ‘மதகஜராஜா’...
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரொடக்ஷன்ஸ் (More 4 Production) தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘கண்நீரா’...