கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இருவரும் தற்போதைய தமிழ் சினிமாவின் உச்சமாக இருந்தாலும், இருவரில் ரஜினிக்கு தான் அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதேபோல், இந்தியாவை கடந்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.
இதற்கிடையே, ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வந்த நிலையில், தனது அரசியல் பிரவேசம் குறித்து குழப்பமான பதில்களை ரஜினிகாந்த் கூறி வர, திடீரென்று நேரடியாக அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் விமர்சனம் செய்ய தொடங்கிய கமல்ஹாசன், உடனடியாக அரசியல் கட்சியையும் தொடங்கி விட்டார்.
ரஜினிகாந்துக்கு தான் அரசியல் சரிபட்டு வரும் என்ற நிலை இருக்க, அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல், விரைவில் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிப்பேன், என்று கூறி வரும் ரஜினிகாந்த், இன்னமும் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாமல் தயக்கம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், அரசியலில் தான் ரஜினிகாந்தை கமல் முந்திவிட்டார் என்றால், தற்போது வேறு ஒரு விஷயத்திலும் முந்திவிட்டார்.
அதாவது, ரஜினிகாந்தின் ‘காலா’ ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம், கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படமால் இருந்தது. ஆனால், காலா படத்திற்கு முன்பாகவே விஸ்வரூபம் 2 சென்சாராகிவிட்டது.
தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதிமுறைப்படி, எந்த படம் முதலில் சென்சார் ஆகிறதோ, அப்படத்திற்கு தான் ரிலீசிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால், ‘காலா’ படத்திற்கு முன்பாக சென்சார் வாங்கியிருக்கும் ‘விஸ்வரூபம் 2’ தான் முதலில் ரிலீஸாகும் என்று தெரிகிறது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...