நடிகர் ஆர்யாவின் திருமணத்தை மையமாக வைத்து பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்நிகழ்ச்சி குறித்து பல ரகசியங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினாலும், அதே அளவுக்கு வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியால் தமிழில் புதிதாக அடியெடுத்து வைத்த அந்த தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னேறியுள்ளது.
தற்போது ஆர்யா யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ள நிலையில், அந்த கேள்வியே அந்த நிகழ்ச்சியின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடுவே போட்டியாளர்கள் சிலர் நிகழ்ச்சி குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் சில சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக ஆர்யா ஒப்பந்தத்தில், கையெழுத்திடும் போது முக்கியமான கண்டிஷனோடு தான் கலந்துக்கொண்டாராம். அது என்னவென்றால், நிகழ்ச்சி முடிவில் யாரை திருமணம் செய்துக் கொண்டாலும் அவருடன் ஆர்யா இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டுமாம், இடையில் விவாகரத்து உள்ளிட்ட எந்த பிரச்சினைகளும் வரக்கூடாது, என்ற கண்டிஷனோடு தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளாராம்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...