வாரியம் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராகவும் காவிரி தொடர்பாக போராடி வருபவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி நடந்தது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், சீறுடையில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்துவது வன்முறையின் உச்சம், என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இத்தகைய கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அங்கு நடைபெற்ற சம்பவத்திற்கு விளக்கமும் அளித்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்ட பாரதிராஜா, ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ரஜினிக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி என்பது இப்போது தான் தெரிகிறது. இப்போது தான் பட்டவர்த்தனமாக தெரிகிறது. உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது. காவிரி பிரச்சினை பற்றி எரிந்த போது வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம். நடந்த போராட்டம் தனி மனிதர்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழன் உறிஞ்சிய ரத்தத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.
பேசும் போது எதை பேசுகிறோம் என்பதை உணர்ந்து பார்த்து பேசுங்கள். ரஜினி வீட்டு சாப்பாடு, குடிநீருக்கு சேர்த்து தான் வீரத்தமிழ் இளைஞர்கள் தடியடியில் ரத்தம் சிந்தினர். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதும் குரல் கொடுக்காமல் தற்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன். தமிழர்களுக்குள் சிண்டு முடிய வேண்டாம்.” என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவின் இந்த கண்டன அறிக்கை தற்போது வைரலாக பரவி வருகிறது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...